தினமணி கொண்டாட்டம்

2கே கிட்ஸ்களின் திருவிழா கொண்டாட்டம்!

தி. நந்​த​கு​மார்

கோயில் திருவிழாக்களில் 2கே கிட்ஸ்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பதிந்து,  உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

தமிழர் கலாசாரத்தில் திருவிழாக்களுக்குத் தனி சிறப்பிடம்.  கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், சம்பிரதாயத்துக்காக நடைபெற்றுவந்தன. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. 

கரோனா பொதுமுடக்கம்- ஊரடங்கு தளர்வுகளையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்  பக்தர்களின் பங்களிப்போடு தற்போது நடைபெறும் விழாக்களில் டிஜிட்டல் முறையும் கை கொடுக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில்,  விழாக்களுக்கு வருகை தருவோரை வரவேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல்,  சுவரொட்டிகள் ஓட்டுதல், விளம்பரப் பதாகைகளை அமைத்தல் போன்றவற்றை மேற்கொண்டு வந்த பக்தர்கள் இப்போது டிஜிட்டல் வரவான சமூக வலைதளங்களையும் விட்டுவைக்கவில்லை.

இந்தத் திருவிழாக்களை  எதிர்நோக்கி பக்தர்கள் பேஸ் புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிந்து, புதிய முறையிலான கொண்டாட்டம் நடைபெறுகிறது.

2கே கிட்ஸ்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள், இளைஞிகளோடு கைப்பேசி பயன்படுத்தும் அனைவரும் பதிவுகளைப் பதிந்து,  உற்சாகமாய் கொண்டாடி வருகின்றனர்.

திருவிழா தொடங்கியது முதல் சுவாமி வீதியுலா,  ஊர்வலம், தரிசனம், திருவிழா போன்றவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடும் கலாசாரம் இப்போது அதிகரித்துவருகிறது.  சுயபடம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடுவதை தற்போது மக்கள்பெரிதும் விரும்புகின்றனர்.  மேலும், குழுக்களில் பதிவிடுதல், நண்பர்களுக்கு அனுப்புதல், ஸ்டேட்டஸ் போடுதல் என்றும் கலக்கிவருகின்றனர்.

இதுதவிர, சுவாமி படங்கள்,  உத்ஸவர் படங்களை வாட்ஸ் ஆப் கணக்குகளில் முகப்பு படமாகவும், வாட்ஸ் ஆப் குழுக்களில் முகப்புப் படமாகவும் போட்டு வரவேற்பு கொண்டாட்டம் இருக்கிறது.

இதற்காக,  பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப்புகளில் தனியே குழுக்களையும், பக்கங்களையும் உருவாக்கி  பக்தர்களை வரவேற்றும் பதிவுகளை பதிந்தும் வருகின்றனர். திருவிழாக்களில் பங்கேற்க முடியாத வெளியூரில் வசிப்போருக்கும் இது உள்ளூரில் இருந்ததுபோன்ற ஓர் எண்ணமும் வந்துவிடுகிறது.

இதேபோல்,  தங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் வசனங்கள், பாடல்கள் அடங்கிய வீடியோக்களை இணைத்து  திருவிழாக்களை வரவேற்று வீடியோக்கள், மீம்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தப் பதிவுகளில் 2கே கிட்ஸ்கள் மட்டுமல்ல; 80-ஸ் கிட்ஸ், 90-ஸ் கிட்ஸ் போன்றோரும் தோள் கொடுத்து, கலக்கிவருகின்றனர்.

கொண்டாட்டங்கள் பலவிதம்; இவையும் ஒருவிதம்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT