தினமணி கொண்டாட்டம்

எனை சுடும் பனி

22nd May 2022 05:15 PM

ADVERTISEMENT

 

ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்து வரும் படம்  "எனை சுடும் பனி".  புதுமுகம் ரிஷி கதாநாயகனாக நடிக்கிறார்.  உபாசனா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாக்யராஜ் கதையின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிங்கம் புலி, மனோ பாலா, சித்ரா லட்சுமணன், "தலைவாசல்' விஜய், கானா சரண் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்ஷேவா கதை எழுதி, இந்தப் படத்தை இயக்குகிறார். இயக்குநரிடம் பேசும்போது...

""சின்ன வயதிலிருந்தே ஒன்றாகப் படித்து பழகியவர்கள் ரிஷியும் உபாசனாவும். உபாசனா தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.  ரிஷி சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே 

வில்லனாக ஒருவன். அதற்கு பிறகு நடக்கும் சம்ப்வங்கள் என்ன என்பது திரைக்கதையின் சுவாரஸ்யம்.  காதலுக்கு எதிரியாக இருக்கும் ஒரு குற்ற சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக் கொண்டு வரும் அதிகாரியாக பாக்யராஜ் நடிக்கிறார்.

ADVERTISEMENT

அந்தப் பகுதிகள் யாவும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

சென்னை, பொள்ளாச்சி, நெல்லியம்பதி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

ஒளிப்பதிவு  -   வெங்கடேஷ். இசை -    அருள்தேவ். பாடல்கள்  -    ராம்ஷேவா வசந்த் ,கானா சரண். கலை  -  அன்பு. 

நடனம் -     சாண்டி , ராதிகா, லாரன்ஸ்சிவா.  சண்டை - டேஞ்சர் மணி. 

ADVERTISEMENT
ADVERTISEMENT