தினமணி கொண்டாட்டம்

மஞ்சு வாரியர்-சந்தோஷ் சிவன் கூட்டணி

15th May 2022 04:53 PM

ADVERTISEMENT

 

நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "சென்டிமீட்டர்' ஒளிப்பதிவாளர்  சந்தோஷ் சிவன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 

இந்த படத்தில்  மறைந்த நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்  "சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT