தினமணி கொண்டாட்டம்

டிரைவர் ஜமுனா

15th May 2022 04:47 PM

ADVERTISEMENT

 

சந்தானம்  நடித்த  "டகால்டி' படத்துக்குப் பின்னர் 18 ரீல்ஸ்  நிறுவனத்தின் சார்பாக எஸ்.பி. சௌத்ரி தயாரித்து வரும் படம் "டிரைவர் ஜமுனா'.  சமீப காலமாக தன்னை முன்னிறுத்தும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்வு செய்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்திலும்  கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஜிப்ரான் இசையமைக்கிறார். "வத்திக்குச்சி' படத்தை இயக்கிய பி. கின்ஸிலின் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  சாலை வழி பயணமாக திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவராக நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை படக் குழுவினர் ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர்.  இதில் முதலில் வெளிவந்துள்ள போஸ்டரில் ரத்தம் சொட்ட சொட்ட காயத்துடன் காரின் முன் ஐஸ்வர்யா ராஜேஷ் டீ குடிக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. 

இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இப்படத்தில் கேப் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். 

ADVERTISEMENT

பெண் டிரைவரின் ஒருநாள் பயணத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பெண் டாக்ஸி ஓட்டுநர்களை நேரில் சந்தித்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து நடித்துள்ளார். மேலும் பல காட்சிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல் நடித்துள்ளார்.  படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்,  படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் இப்படம் வெளிவர இருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT