தினமணி கொண்டாட்டம்

"டிவிட்டரில்  இடம்  இருக்கும்''

8th May 2022 06:00 AM

ADVERTISEMENT


உலகிலேயே பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்,  டிவிட்டர் நிறுவனத்தை  43 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.30 லட்சம் கோடிக்கு)  வாங்கியுள்ளார். 

2017-ஆம் ஆண்டு இறுதியில் "டிவிட்டரை விரும்புகிறேன்..' என்று எலான் டிவிட் செய்தார்.  "அப்படின்னா அதை நீ ங்கள் வாங்கியே ஆகணும்' என்று ஒருவர் பதில் டிவிட் போட்டார்.   "எவ்வளவு இருக்கும்...?' என்று எலான் மீண்டும் டிவிட் போட்டிருந்தார்.  இருப்பினும்,  ஆசை நிறைவேற எலானுக்கு  4 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

"டிவிட்டரைப் பயன்படுத்துபவர்களுக்குத் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய தேவையான சுதந்திரத்தை வழங்குவதில்லை.  அதிக சுதந்திரம் வழங்கவே டிவிட்டர் தளத்தை வாங்கியுள்ளேன்'...  என்கிறார் எலான்.

இவருக்குச் சொந்தமான வீடுகள் இல்லை. தனது நண்பர்களின் வீடுகளில் தங்கிக் கொள்ளும் எலான், தனக்கு சொந்தமான அரண்மனை போன்ற வீட்டை விற்றுவிட்டார். 

ADVERTISEMENT

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோ ரியாவில் 1971-ஆம் ஆண்டு ஜூன் 28-இல் பிறந்தவர்.  50 வயதாகிறது. 1980-இல் பெற்றோர்  விவாகரத்து செய்து கொள்ள,  எலான் அப்பாவுடன் வாழ்ந்தார்.

12 வயதிலேயே கணினி மென்பொருள் எழுதத் தொடங்கி விட்டார். விளையாட்டு மென்பொருளை விரிவாக்கம் செய்தார்.  பள்ளிப் படிப்பு முடித்ததும் அமெரிக்காவுக்குச் சென்றால்தான் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்ற முடிவுடன் எலான் பயணித்தார்.  18-ஆம் வயதில் கனடாவில் குடியேறினார்.  

ஒரு நடிகையைக் காதலித்தார். திருமணம் செய்துகொண்டார்.  பிரிந்தார். அவர் பெயரிலே. இன்னொரு நடிகை நட்பு தொடரவில்லை. பிறகு கனடா இசைக்கலைஞர் கிரிம்சுடன் தொடர்பு- குழந்தையும் பிறந்தது.

எலான் தனது தம்பி  கிம்பாலுடன் இணை ந்து  ஜிப் 2 என்ற நிறுவனத்தை 1995-இல் தொடங்கினார்.  அதன் வளர்ச்சியைக் கண்டு 1999-இல் காம்பேக் நிறுவனம் அதிக விலை கொடுத்து வாங்கிக் கொண்டது. இப்படி பல நிறுவனங்களை ஆரம்பித்து, பிறகு வி ற்று பணம் சேர்த்தார்.

விண்வெளி ஆராய்ச்சி,  செவ்வாயில் ஆய்வு என்று திசைமாறிய எலான் அதற்காக "ஸ்பேஸ் எக்ஸ்' எனும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

2019-இல் ரா ப் இசை டிராக்குகளை வெளியி ட்டா ர்.

"ஸ்னாப்டீல்' ஆன்லைன் விற்பனை தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குணால் பாஹ்ல் வெளியிட்ட பதிவில்,  "டிவி ட்டர் தளத்தை வாங்கிய பணத்துக்குப் பேசாமல் இலங்கை நாட்டையே வாங்கியிருக்கலாம். எலான் மாஸ்க்கை "சிலோன் மாஸ்க்'  என்று அழை த்துக் கொண்டிருக்கலாம்'  என்று கமெண்ட் அடித்தது வைரல் ஆகியிருக்கிறது.

"கருத்து சுதந்திரம் ஜனநாயகத்தின் அடித்தளமாகும்.  டிவிட்டர் மனித குலத்தின் எதிர்காலத்துக்கு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜி ட்டல் தளமாக டிவிட்டர் அமையும்.  இதை மேம்படுத்துவோம்.  பொய்ச் செய்திகளை, வீணான  செய்திகளைப் பரப்புவதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.  என்னை மோசமாக  விமர்ச்சி ப்போருக்கும் இடம் இருக்கும்' என்றார் எலான்.

ADVERTISEMENT
ADVERTISEMENT