தினமணி கொண்டாட்டம்

ஆல்பம் பாடலில் பிக் பாஸ் நட்சத்திரங்கள்

8th May 2022 05:27 PM

ADVERTISEMENT


மேலை நாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப் பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கி வளர்ந்து வருகிறது. இதில் சமீபத்திய வரவு "தோட்டா'.

இளம் திறமையாளர்களை, அவர்களின் திறமைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தும் வகையில், சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், புதிய இளம் திறமையாளர்களின் உருவாக்கத்தில் ஆல்பம் பாடல்களை உருவாக்கி வருகிறது நாய்ஸ் அன்ட் கிரைன்ஸ் நிறுவனம். "கண்ணம்மா என்னம்மா.....' ஆல்பம் பாடலின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அந்நிறுவனம் தயாரித்திருக்கும் அடுத்த ஆல்பம் பாடல் தோட்டா. இப்பாடலை பிரேம்ஜி, நித்யஸ்ரீ பாடியுள்ளனர். இப்பாடலில் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் நடிக்க, தேவ் பிரகாஷ் இசையில் இப்பாடலை பிரிட்டோ இயக்கியுள்ளார்.

ரியோ ராஜ் பேசும் போது... ""கண்ணம்மா பாடல் ஒரு மொட்டை மாடியில் எதேச்சையாக உருவானது. அது மிகப்பெரிய ஹிட்டானது. ஒத்துழைப்பு தந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரிய நன்றி. மாதேஷ் மாணிக்கம் பெரிய பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர். அவர் எங்களுக்காக இதில் பணியாற்றி தந்தமைக்கு நன்றி. பிரிட்டோ மிக அற்புதமாக இயக்கியுள்ளார். அவர் இன்னும் பெரிதாக வளர்வார். பிக்பாஸில் சண்டை போட்டுக்கொண்டாலும் நானும் ரம்யா பாண்டியனும் நண்பர்கள். அவர் இதில் நடித்தது மகிழச்சி. ரம்யா பாண்டியன் பேசும் போது... ""நான் இதுவரை எந்த ஆல்பம் பாடலும் செய்ததில்லை. இந்த பாடல் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்பாடலை ஹிட் செய்யுங்கள்.... என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT