தினமணி கொண்டாட்டம்

படப்பிடிப்பு நிறைவு

1st May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் "வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்தது. மும்பையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் படப்பிடிப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். 

தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது இந்தப் படம். அவரது வாழ்க்கை மும்பைக்குச் சென்ற பிறகு ஒரு பெரும் திருப்பத்தை சந்திக்கிறது. படத்தின் பெரும்பகுதி திருச்செந்தூர், சென்னை, மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. இதில்  சித்தி இதானி, நீரஜ் மாதவன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT