தினமணி கொண்டாட்டம்

கே.ஜி.எஃப். 3

1st May 2022 06:00 AM

ADVERTISEMENT

 

சமீபத்தில் வெளியான "கே.ஜி.எஃப்' படத்தின் 2-ஆம் பாகம் பெரும் வரவேற்பை பெற்றிருப்பதோடு, வசூல் சாதனையும் படைத்துள்ளது. 

இந்த நிலையில் "கே.ஜி.எஃப்' படத்தின் 3-ஆம் பாகம் வரவேண்டும் என்கிற ஆர்வமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் அளித்த பேட்டி ஒன்றில், ""கே.ஜி.எஃப்.' படத்தின் 3-ஆம் பாகத்தின் முதல்கட்ட பணிகள் தொடங்கி விட்டது. இதில் யார் நடிப்பார்கள் உள்ளிட்ட வேறு எந்த விஷயங்களும் முடிவு செய்யப்படவில்லை" என்று கூறியிருக்கிறார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் "சலார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் 30 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள 70 சதவீத படப்பிடிப்பை முடித்த பின்னரே அவர் "கே.ஜி.எஃப் 3' படத்தின் பணிகளை தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT