தினமணி கொண்டாட்டம்

யோகிபாபுவின் "மெடிக்கல் மிராக்கில்'

26th Jun 2022 04:54 PM

ADVERTISEMENT

 

ஏ1 புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "மெடிக்கல் மிராக்கல்'.  கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்கிறார். மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், , டைகர் தங்கதுரை உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"ஏ 1'," பாரீஸ் ஜெயராஜ்'  உள்ளிட்ட படங்களை தந்து கவனம் ஈர்த்த ஜான்சன் கே. இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... ""   த்ரில்லர், காதல், குடும்ப படம் என ஒவ்வொரு வகை படங்களையும், ஒரு தரப்பினர் ரசிப்பார்கள் ஆனால், காமெடி படங்களை அனைத்து ரசிகர்களும் கொண்டாடுவார்கள். நகைச்சுவை படங்கள் மனதிற்கு முழுமையான நிம்மதியை தரும், ஆனால் முழுமையாக அனைவரும் ரசிக்கும்படி, வாய்விட்டு சிரிக்கும்படி காமெடி படங்கள் தருவதென்பது எளிதல்லஅந்த வகையில், என் முந்தைய இரு படங்களிலும் என் நேர்த்தியை கொண்டு வந்தேன். இதிலும் அதே பாணிதான்.  படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. சித்தார்த் விபின் இசையமைக்கிறார். எஸ். மணிகண்ட ராஜா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபு தர்மபிரபு, மண்டேலா, கூர்கா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான "மண்டேலா' படத்தில் சிகை திருத்தும் தொழிலாளியாக நடித்து அனைவர் இடத்திலும் பாராட்டைபெற்றார். இதையடுத்து, தற்போது "மெடிக்கல் மிராக்கல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT