தினமணி கொண்டாட்டம்

பயண கதையில் த்ரில்லர்

26th Jun 2022 04:46 PM

ADVERTISEMENT

 

நியான் ஸீ ஃபிலிம்ஸ் ஸ்ரீஜேஷ் வல்சன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சனீஷ் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "திவ்யா. த்ரில்லர் பாணி திரைக்கதையாக இப்படம் உருவாகி வருகிறது. சாஸ்வி பாலா, மிதுன், சம்பத் ராம், மேத்யூ வர்க்கீஸ், பிரவின், அகில் கிருஷ்ணஜித் முருகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விபின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரெஜிமோன் இசையமைப்பில் பாடல்கள், மற்றும் வசனத்தை முருகன் மந்திரம் எழுதுகிறார். புதுப்புது இடங்களுக்குப் போகவேண்டும், இதுவரை சந்திக்காத மனிதர்களுடன் பழக வேண்டும் என்று தன்னந்தனியாகவே சுதந்திரப் பறவையாக சுற்றித்திரியும் இளம்பெண் திவ்யா. திவ்யாவும் அவளது நண்பனும் இதுவரை பார்க்காத ஓர் இடத்திற்கு பயணம் செய்கிறார்கள். அறிமுகமில்லாத இடம், அறிமுகமில்லாத மனிதர்கள் எதிர்பாராத ஒரு சம்பவம்.
அது எந்த இடம்.. அது என்ன சம்பவம் அந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதுதான் கதை. 
வழக்கமான பாணியில் இல்லாது, மிக வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது. 
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. விரைவில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாக இருக்கிறது.  ஆகஸ்ட் மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT