தினமணி கொண்டாட்டம்

பீனிக்ஸ் பறவையான டி.கே.

தினமணி

முன்னாள் இந்திய அணியின் வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட டி.கே. எனப்படும் தினேஷ் கார்த்திக்,  தனது அபார ஆட்டத்தில் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும்  துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்நாள் அணியின் வீரர் ஆகிறார்.

கிரிக்கெட் என்றாலே இந்திய ரசிகர்கள் மெய்மறந்து ரசிப்பது வழக்கம். அதிலும் டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்களுக்கு பின் ஐசிசி டி20 ஆட்டங்களை அறிமுகம் செய்த நிலையில், அதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரும் உலகிலேயே அதிகம் பார்க்கப்படும் மற்றும் வருவாய் ஈட்டும் போட்டியாக உள்ளது.

தோனிக்கு சீனியர் தினேஷ்:

சென்னையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டரான தினேஷ் கார்த்திக், 2004-இல் இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளில் இடம் பெற்றவர். வெற்றிகரமான விக்கெட் கீப்பர் கேப்டனாக திகழ்ந்த தோனியே இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்குக்கு பின்னர் தான் சேர்க்கப்பட்டார். 2006-இல் டி20 அணியிலும் இடம் பெற்றார்.

எனினும் அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும், நிராரிக்கப்படுவதுமே தினேஷ் கார்த்திக்கின் நிலையாகி விட்டது. முதலில் இங்கிலாந்தின் மைக்கேல் வாகனை தானை ஸ்டம்ப் அவுட் செய்தார் கார்த்திக். பல்வேறு தருணங்களில் சிறப்பாக ஆடினாலும், அதை நிலையாக வெளிப்படுத்தவில்லை. மேலும் முதல்தர கிரிக்கெட்டிலும் டி.கே. முத்திரை அதிகம் பதித்துள்ளார். குடும்ப வாழ்க்கையில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும், தொடர்ந்து ஆட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார்.

15 ஆண்டுகளாக உள்ளே-வெளியே:

புதிய இளம்வீரர்கள் அறிமுகம் ஆனதும், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு வினையானது. எனினும் மனம் தளராமல் ஒருநாள் அணியில் இடம் பிடித்து அவ்வப்போது ஆடி வந்தார்,.  2014-இல் வங்கதேச தொடரில் இடம் பெற்றாலும் மோசமான விக்கெட் கீப்பிங் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. 15 ஆண்டுகளாக இந்திய அணியில் உள்ளே இடம் பெறுவது, வெளியேற்றப்படுவது என்ற அவல நிலையில் இருந்தார்.

தோனி ஓய்வுக்கு பின் தினேஷ் கார்த்திக் அந்த இடத்தை அலங்கரிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரித்திமான் சாஹா முந்திக் கொண்டார். பல்வேறு தருணங்களில் தினேஷால் தனது இருப்பை காட்டிக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். அவரது ஆட்டத் திறன் தொடர ஐபிஎல் பேருதவியாக இருந்தது.

பெங்களூரு அணியில் அசத்தல்: 

நடப்பு ஐபிஎல் 2022 சீசனில் பெங்களூரு அணியில் ஆடிய டிகே 183.33 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மொத்தம் 330 ரன்களை விளாசினார்.  இந்த ஐபிஎல் சீசன் டிகேவுக்கு புதிய எழுச்சியாக அமைந்தது. சிறந்த பினிஷர் என்ற பெயரையும் பெற்றார்.   கடந்த 2019-இல் அணியில் இருந்து நீக்கப்பட்ட டிகேவுக்கு தற்போது நடைபெறும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தினேஷுக்கு வாய்ப்பை கிடைக்கச் செய்தது.

தொடரில் சிறப்பாக ஆடி 2-2 என சமநிலை ஏற்படச் செய்தார்.

டி20 உலகக்கோப்பை: சிறந்த பினிஷரான 37 வயதான தினேஷ் கார்த்திக் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டி.கே. கூறியதாவது:

""2006-இல் டி20 ஆட்டத்துக்கும் தற்போதுஉள்ள ஆட்டத்துக்கும் கடும் வேறுபாடு உள்ளது. வரும் டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் இடம் பெறுவேன். நீண்ட காலமாக அணியில் இடம் பெறாத போதிலும், ஆட வேண்டும் என்ற உத்வேகம் என்னுள்ளே இருந்தது'' என்றார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT