தினமணி கொண்டாட்டம்

நலம் தரும் யோகா

ஆர். ராஜகோபால்

ஷீத்தல் பிராணாயாமம்

உடல் குளிர்ச்சி அடைய ஷீத்தல் பிராணாயாமம் உதவுகிறது.  பிராண சக்தி உடலினுள் சீராகப் பரவ உதவுகிறது. நுரையீரல் பிரச்னைகள், மார்பகச் சளி விரைவில் குணமாகும். உடல் அதிகப்படியான வெப்பம் சமப்படுத்தல்,  உடல் குளிர்ச்சி அடைகிறது.  உடல் சூட்டால் வரும் மூல நோயாளிக்கு நல்ல முன்னேற்றம் அளிக்கும்.  ஷீத்தல் பிராணாயாமம் கோடையில் வெயில் தாக்கத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள உதவும் எளிய யோகப் பயிற்சியாகும். 

நிலை: 

1. கண்கள் மூடி பத்மாசன நிலையில் உட்கார வேண்டும். 
2. இரண்டு கைகளையும் சின் முத்திரையில் இரண்டு கால் முட்டிமீது வைத்துக் கொள்ள வேண்டும்.  
3. நாக்கை வெளியே நீட்டி, உருளை போன்று உட்புறமாக மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
4. இந்த நிலையில் நாக்கின் வழியாக மூச்சை சத்தமாக உள் இழுக்க வேண்டும். 
5. மூச்சை உள்ளே இழுத்ததும்,  நாக்கை உள்ளே கொண்டு செல்ல வேண்டும். 
6. பற்களின் வழியாக மூச்சை வெளியேற்ற  வேண்டும். 
ஐந்து முறை செய்யலாம்.  முடிவில் இரு உள்ளங்கைகளையும் தேய்த்து, கண்களில் ஒத்தி மெதுவாகக் கண்களைத்  திறக்க  வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT