தினமணி கொண்டாட்டம்

ஒத்திகை பார்த்து படப்பிடிப்பு

19th Jun 2022 05:01 PM

ADVERTISEMENT

 

"அட்டு' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற ரத்தன் லிங்கா இயக்கி வரும் படம் "லாக்'. 
மதுஸ்ரீ, பிரியங்கா, புவனா, ஹரிணி, மதன், மணி ஸ்ரீனிவாச வரதன், பாரதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""இன்றைய காலத்துப் பெண்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி எடுத்துக் கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது. 
"இந்த உலகத்தில் உன்னைக் காப்பாற்ற யாராலும் முடியாது. நீயே தான் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்' என்கிற கருத்து அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு இருந்து தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புரிய வைக்கும். 
இதற்கு எந்தவிதமான நட்சத்திரப் பலமும் தேவையில்லை என்பதால் புதுமுகங்களை வைத்து  உருவாக்கி இருக்கிறோம்.ஏனென்றால் இந்தக் கதைக்குப் புதுமுகங்கள் நடித்தால்தான் சரியாக இருக்கும்.  புதுமுக நடிகர்களுக்காக  முறையாக ஒத்திகை பார்த்து படப்பிடிப்பை நடத்தினோம். படத்தில் உள்ள கருத்து பெரிய அளவில் சென்றடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கதையில் வடசென்னை பின்புலம் சிறிதளவு வரும். பெரும்பகுதி கிழக்கு கடற்கரை சாலை , கோவளம் என்று எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளி சென்னையில் இருந்து வெளியே செல்லும் பயணம் என்ற வகையில் இந்தக் கதை இருக்கும்'' என்றார் இயக்குநர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT