தினமணி கொண்டாட்டம்

மூதறிஞர் என்றால் என்ன?

12th Jun 2022 06:00 AM | -வி.ச.வாசுதேவன்

ADVERTISEMENT

 

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரை (ராஜாஜியை) அவருடைய நுட்பமான அறிவுத் திறன் காரணமாக, "மூதறிஞர்' என்று அழைக்கின்றோம். இந்தச் சொல்லுக்கான பண்பு நலன்கள் என்ன என்பதை மகாகவி பாரதியார் தனது முப்பெரும் பாடல்களில் ஒன்றான பாஞ்சாலி சபதத்தில் திருதராஷ்டிரன் கூற்றாக இவ்வாறு கூறுகிறார்:

""தம்மொரு கருமத்திலே- நித்தம் தளர்வறு முயற்சி மற்றோர் பொருளை இம்மியும் கருதாமை சார்ந்திருப்பவர் தமை நன்கு காத்திடுதல் இம்மையில் இவற்றினையே செல்வத்து இலக்கணம் என்றனர் மூதறிஞர்''.

பொருள்:

ADVERTISEMENT

தங்களுக்கென்று அமைந்துள்ள ஒரு தொழிலில் அன்றாடம் தளர்ச்சியில்லாத முயற்சியுடன் ஈடுபடுதல், பிறருடைய செல்வத்தில் அணு அளவு கூட ஆசைப்படாமல் இருத்தல், தங்களை நம்பி இருப்பவர்களை நல்ல முறையில் காப்பாற்றுதல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT