தினமணி கொண்டாட்டம்

ஊட்டி சென்டிமெண்ட்

12th Jun 2022 07:44 PM

ADVERTISEMENT

 

முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு  படங்களை இயக்குவது இயக்குநர் சுந்தர்.சியின் பாணி. அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்கு பிறகு தற்போது அவர் இயக்கி வரும் படம் "காபி வித் காதல்'.  ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த்,  மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற "உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், ஊட்டியை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வகையில் தற்போது இந்தப் படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன், ஐ. டி. கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன், சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன். அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.  இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள்  நடந்து வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT