தினமணி கொண்டாட்டம்

சர்வதேச விருது பிரிவுகளில் இளையராஜா

3rd Jul 2022 03:39 PM

ADVERTISEMENT

 

இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஆங்கிலத்தில் உருவாகி வரும் படம் "எ பியூட்டிஃபுல் பிரேக் அப்'. இப்படத்தின் முதல் பாடலான "கம் ஃப்ரீ மீ...' உலக இசை தினமான கடந்த ஜூன் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் க்ரிஷ் முத்ரகடா மற்றும் மேட்டில்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் உலகளவில் பிரசித்திப் பெற்ற திரைக்கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இப்படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். இயக்குநர் அஜித்வாசன் பேசும் போது...

""இப்படத்திற்கான இளையராஜாவின் பங்கு, படத்தின் பிம்பத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. உலகெங்கிலும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட ஓர் இசையமைப்பாளர் இப்படத்திற்காக தனது சிறந்த இசையை வழங்கியுள்ளது பெருமைக்குரியதாகும். வெகுநாள்களுக்குப் பிறகு ஒரு திகில் படத்திற்குள் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் இளையராஜா.

இப்படத்திற்கான பின்னணி இசை, அவரின் பரந்த இசை ஞானத்திலிருந்து மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். சமீபத்தில் கூட இளையராஜா அளித்திருந்த ஒரு நேர்காணலில் கூட, எ பியூட்டிஃபுல் பிரேக் அப் படத்தையும், என்னையும் வெகுவாக பாராட்டி பேசியிருந்தார். அவரது பயணத்தில், முற்றிலும் தனித்துவமானதாக இருப்பதால், மேற்கத்திய பார்வையாளர்கள் அதனை மொத்தமாகக் கொண்டாடுகிறார்கள்.

ADVERTISEMENT

எனவே, படமும், இசையும் ஆஸ்கார், கிராமி, கோல்டன் குளோப் போன்ற விருது பிரிவுகளுக்கு அனுப்பபட்டுள்ளது. இவை தவிர உலகளவில் பல்வேறு சர்வதேச விருதுகளை இப்படம் குவித்து வருகிறது'' என்றார் இயக்குநர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT