தினமணி கொண்டாட்டம்

சக்கர நாற்காலியில் சாதனை! 

DIN

மாற்றுத் திறனாளியான கமலகாந்த நாயக்கால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பல இடங்களுக்கும் சென்று வருகிறார். ஒடிசாவில் பூரி நகரில் வசிக்கிறார். 215 .4 கி மீ தூரத்தை சக்கர நாற்காலியில் அமர்ந்து 22 மணி நேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் கமலகாந்த நாயக்.
இதற்கு முன் சக்கர நாற்காலியில் அமர்ந்து 182 .4 கிமீ தூரத்தை ஒரு நாளில் கடந்த போர்ச்சுக்கீசியரான மரியோ டிரினிடாட் என்பவர் கின்னஸ் சாதனையாளராக இருந்தார்.
சென்ற வாரம் புவனேஷ்வர் ராஜ் மஹால் சதுக்கத்தில் இந்த கின்னஸ் சாதனை அரங்கேறியது. 680 மீ நீளமுள்ள தடகளத்தை பல முறை சுற்றி வந்து 28 வயதான கமலகாந்த நாயக் 215 . 4 கிமீ தூரத்தைக் கடந்தார்.
""215.4 கிமீ தூரத்தை 23 மணி நேரத்தில் கடந்துவிட முடியும் என நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த தூரத்தை 22 மணி நேரத்தில் கடந்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன்'' என்கிறார் கமலகாந்த நாயக்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கார்நாடக பொதுக்கூட்டத்தில் மோடி உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT