தினமணி கொண்டாட்டம்

பிரெஞ்சு கதை

4th Dec 2022 06:00 AM | எஸ்.குரு

ADVERTISEMENT


விக்டோரியா வளர்த்த வித்தியாசமான நாய்ஆங்கிலத் தலைப்பு: விக்கி அன்ட் ஹர் மிஸ்ட்ரி வெளியான ஆண்டு-2021 இயக்குநர்- டெனிஸ் இம்பர்ட் ஓடும் நேரம்- 84 நிமிடங்கள் விக்டோரியா, எட்டு வயதுச் சிறுமி சோர்வாக இருந்தார்.

தந்தை ஸ்டீபனின் அன்பு அவளுக்குப் பரிபூரணமாகக் கிடைத்தது. ஆனால், அது மட்டும் அவளுக்குப் போதவில்லை.  அவளது தாய் மெடில்டா அண்மையில் இறந்துப் போயிருந்தார். தாயின் அன்பு கிடைக்காத நிலையில், ஏக்கம்  அவரது முகத்தில் தெரிந்தது.

ஒரு மலைப்பாங்கான பிரதேசத்தின் அருகில் கிராமம் ஒன்றில் விக்டோரியாவும் தந்தை ஸ்டீபனும் வசித்து வந்தனர். அருகே சிறிய கானகம் இருந்தது.

""வா. அம்மா. காலாற நடந்துவிட்டு வரலாம்''- என்று மகளை அழைத்தார் ஸ்டீபன்.

ADVERTISEMENT

நடந்து சென்று இருவரும் கானகம் தொடங்கும் இடத்தை அடைந்தனர். ஒரு முதியவரின் வீடு அங்கே இருந்தது. முதியவர் ஸ்டீபனுக்குப் பழக்கமானவர். வீட்டருகே இருந்த மரப்பெட்டியில் ஒரு ப்ரவுன் வண்ண நாய்க்குட்டி படுத்திருந்தது.

""அப்பா. அவர் எனக்கு இந்த நாய்க்குட்டியைத் தருவாரா?'' என்றாள்.

""இதற்கு மிஸ்ட்ரி என்று பெயர்! இது இனிமேல் உன் உடைமை!''

நாய்க்குட்டியை விக்டோரியா மரப்பெட்டியில் இருந்து எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள்.

கண்ணும் கருத்துமாக அதைத் தனது வீட்டில் வளர்த்து வந்தாள். சில ஆண்டுகள் சென்றன.

நாய்க்கு உடம்பு சரியில்லாதபோது, அன்னா என்ற கால்நடை பெண் மருத்துவரிடம் ஸ்டீபன் நாயை எடுத்து சென்று காட்டினார். அன்னா பரிசோதித்துவிட்டு, மருந்து எழுதிக் கொடுத்தார்.

""இது நாய் அல்ல! ஓநாய் வம்சம். இதை வீட்டில் வைத்திருக்கக் கூடாது. விலங்குகள் காப்பகத்தில் விட்டுவிடுங்கள்'' என்றார் அன்னா.

ஓயாய் மிஸ்டரி காப்பகத்தில் இருந்து தப்பி ஓடி, விக்டோரியாவின் வீட்டுக்கு வந்துவிட்டது. விக்டோரியா கொஞ்சினாள். ஓநாய்க்கும் பிரிய மனமில்லை.

மனதில் ஏக்கத்துடன் ஓநாய், தனது கூட்டத்தினருடன் சேரக் கானகம் நோக்கி ஓடியது. சிறுமியும் பின்தொடர்ந்தாள். மறுபடியும் ஓநாய் திரும்பி விக்டோரியாவை நோக்கி வந்தது.

அங்கே துப்பாக்கியுடன் வந்த ஒருவர் இந்த ஓநாய் சிறுமியைக் கடிக்க வருகிறது என்று தவறாக எண்ணி அதைச் சுட்டார்.  குண்டடி பட்ட ஓநாய் விழுந்தது. சிறுமி கதறி அழுதாள்.

உடனே ஸ்டீபன் கால்நடை அறுவைச் சிகிச்சை மருத்துவரிடம் ஓநாயைக் கொண்டு செல்ல,  அதன் உடம்பில் இருந்த குண்டு அகற்றப்பட்டது.

""அப்பா! ஓநாய் சில வாரங்கள் நம்முடன் தங்கி இருக்கட்டுமே!'' என்று அப்பாவிடம் விக்டோரியா கெஞ்சி கேட்டாள்.

ஓநாயைத் தன்னுடன் வைத்துக் கொண்டு சீராட்டினாள். ஒருநாள் கனக்கும் மனதுடன் அதை கானகம் நோக்கி நடத்திச் சென்றாள்.

""கண்ணே! நீ நாய் அல்ல. ஓநாய்! உன் கூட்டத்தாருடன் இணைந்துவிடு!'' என்று அனுப்பினாள். 

திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே சென்றது மிஸ்டரி. விக்டோரியாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT