தினமணி கொண்டாட்டம்

சினிமாவின் சுழற்சி

4th Dec 2022 06:00 AM

ADVERTISEMENT

 

கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடித்துள்ள படம் "டி. எஸ். பி'. பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அனுகீர்த்தி நடித்துள்ளார்.  இதன் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பாடல் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார். இதில் விஜய்சேதுபதி பேசும் போது... "" இயக்குநர் பொன்ராமுடன் படம் செய்வேன் என நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுதாக இப்படத்தில் மாற்றிவிட்டார். 

இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இந்தப் படம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் இங்கு வருவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சி. சினிமாவில் எதைப் புதுமையாகச் செய்ய நினைத்தாலும் அதற்குப் பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும் உங்களுக்கு எங்களின் நன்றி என்றார். கமல் பேசும் போது.... இங்கு வந்தது விஜய்சேதுபதி எனும் பிரபல கலைஞனுக்காக அல்ல. என்னைப் போலவே சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலுக்காகத் தான். 

என் தலைமுறையில் நான் பலரை வியந்து பார்த்திருக்கிறேன். அவர்கள் போல சாதிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது என்னை இவர்கள் ஊக்கமாக எடுத்துக்கொள்வது எனக்கு மகிழ்ச்சி. நாளை விஜய்சேதுபதியின் சாதனையைப் போற்றும் நடிகர்கள் வருவார்கள், அது தான் சினிமாவின் சுழற்சி என்றார். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT