தினமணி கொண்டாட்டம்

குற்றத்தின் பின்னணி

14th Aug 2022 04:25 PM

ADVERTISEMENT

 


கிராக் பிரைன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "நாட் ரீச்சபிள்'. விஷ்வா, சாய் தன்யா, சுபா உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் சந்துரு முருகானந்தம். படம் குறித்து  இயக்குநர் பேசும் போது...

"" இந்தப் படத்தை முதலில் பைலட் ஃபிலிம் என்ற முறையில் எடுத்தோம்.  அதன் மூலம் தயாரிப்பாளருக்கு எனது சினிமா மேக்கிங் பற்றி தெரிய வந்தது. அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார். ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது கதை மாந்தர்களை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசும் பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டகத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன். அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். 

அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறி விடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல். ஒரு நல்ல படத்தை எடுத்துள்ளோம், படத்திற்கு ஆதரவு தாருங்கள்''  என்றார் இயக்குநர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT