தினமணி கொண்டாட்டம்

சமையல் டிப்ஸ் (07/08/2022)

7th Aug 2022 06:56 PM

ADVERTISEMENT

சிறிதளவு சேமியாவை வறுத்து, ரவையுடன் தயிரில் ஊறவைத்து ரவா இட்லி செய்து பாருங்கள். சுவை வித்தியாசமாக இருக்கும்.
* உளுந்து வடைக்கு அரைத்த மாவுடன் ஒரு கைப்பிடி அளவு கோதுமை மாவைச் சேர்த்து செய்யுங்கள். சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
* சப்பாத்திக்கோ, பூரிக்கோ மாவை உருட்டி தேய்க்கும்போது மைதா மாவுக்குப் பதிலாக கார்ன் ப்ளார் மாவை பயன்படுத்தினால், நன்றாகத் தேய்க்க வரும். பொரிக்கும்போது, தனியாக உதிரவும் செய்யாது.
* முட்டைக்கோûஸ வேக வைக்கும்போது, ஒருவிதமான மணம் வீசும். கோஸþடன் சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து கிளறிவிட்டால் அந்தமணம் வராது.
* மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சி வராது. நீண்ட நாள்களானாலும் கெட்டுப் போகாது.
* எந்த வகை பொரியல் செய்தாலும், தேங்காய்த் துருவல் சேர்ப்பதற்குப் பதிலாக சுத்தம் செய்த நெற்பொரியைத் தூவி இறக்கலாம். சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்.
* எண்ணெய்ப் பிசுக்கு இருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி மோர் விட்டுக் கலக்கிப் பின்னர், தேய்த்தால் பிசுக்கு போய்விடும்.
* அடைக்கு ஊறப் போடும்போது துவரம் பருப்புக்குப் பதில் கொள்ளு ஊறப் போட்டால் சுவையாக இருக்கும். வாய்வுத் தொல்லையும் இருக்காது.
* தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால், தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
* கசப்பு காய்கள் எதுவாக இருந்தாலும், அதை அரிசி களைந்த தண்ணீரில் சிறிதுநேரம் போட்டு வைத்தால், கசப்புத் தன்மை போய்விடும்.
* தயிர்சாதம் கிளறும்போது, ஒரு தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து கிளறினால் தயிர் சாதம் சுவையுடன் இருக்கும்.
* ஒரு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பைச் சேர்த்து மென்று ஒதுக்கினால் பல் வலி குறையும்.
-எம்.எஸ்.லட்சுமிவாணி
 

ADVERTISEMENT
ADVERTISEMENT