தினமணி கொண்டாட்டம்

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி..?

7th Aug 2022 07:05 PM

ADVERTISEMENT

ஆரோக்கியமாக வாழும் முறை குறித்து ஆயுர்வேதம் கூறுவது என்ன?
பாவப்பிரகாசம் நூலில்..
எப்போதும் சாப்பிடும் நேரத்தில் மங்களகரமான பொருள்களையே பார்க்க வேண்டும். இதனால் ஆயுள், தர்மம் வளர்கின்றன.
பிபோஜனம் செய்வதற்கு முன் எப்போதும் உப்புடன் கூடிய இஞ்சியைச் சாப்பிடுவது பசியை வளர்க்கின்றது. ருசியைத் தருகின்றது. நாவையும் தொண்டையையும் சுத்தம் செய்கின்றது.
பிஆகாரத்தில் முதலில் கடினமான உணவுப் பொருள்களை உருக்கிய நெய்யுடன் கூட்டிச் சாப்பிட வேண்டும் . பிறகு மிருதுவான பொருள்களையும் இறுதியில் திரவமான பொருள்களையும் சாப்பிட வேண்டும்.
பி இரும்புப் பாத்திரத்திலும், கண்ணாடி பாத்திரத்திலும் சாப்பிடுவது ஸித்தியைக் கொடுக்கிறது. வீக்கம், சோகை இவற்றைப் போக்குகிறது. வலிமையைக் கொடுக்கிறது. காமாலையைப் போக்குவதில் சிறந்தது.
சிதித்ஸா திலகம் நூலில்..
வாழை இலையில் சாப்பிடுவது உடம்புக்கு வலிமையைக் கொடுக்கிறது. விஷ தோஷத்தைப் போக்குகிறது. வாத, பித்த, கப தோஷங்களையும் குறைக்கிறது. ஆண்மையை அளிக்கிறது. ருசியைத் தருகிறது. பசியைத் தூண்டுகிறது. சுத்தமானது. இலகுவானது. குளிர்ச்சியை உண்டாக்குகிறது. உடம்புக்கு ஒளியை (தேஜஸ்) அளிக்கிறது.
ஸூஸ்ருதஸ்விதா நூலில்..
உடம்புக்கு மிகவும் ஓய்ச்சல் உண்டாகாமல் இருக்கும் அளவுக்கு உலாவுதல், ஆயுள், வலிமை, புத்தி, பசி இவற்றை அளிக்கிற ஞானேந்திரியங்களுக்கு கண், காது, மூக்கு, நாக்கு இவற்றுக்குப் புத்துயிர் அளிக்கிறது. இதற்கு "சங்ரிர மணம்' என்று பெயர்.
பி குளிர்ந்த நீரில் தலைக்குக் குளிப்பது தூக்கம், எரிச்சல், ஓய்ச்சல் இவற்றை நீக்குகிறது. வியர்வை, அரிப்பு, தாகம் இவற்றை போக்குகிறது. இதயத்துக்கு நலம் செய்கிறது. எல்லா இந்திரியங்களுக்கும் சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. சோம்பலைப் போக்குகிறது. மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. பசியைத் தூண்டுகிறது. ஆண்மையை வளர்க்கிறது. வெந்நீரில் தலை மூழ்குவது கண்ணுக்குக் கெடுதல், குளிர்ந்த நீரில் மூழ்குவது கண்ணுக்கு நல்லது. இதமானது.
பிகால்களைக் கழுவி சுத்தம் செய்துகொள்வது, கால்களின் அசுத்தத்தையும், நோய்களையும் போக்குகிறது.
சரகஸம்ஹிதா நூலில்..
சுத்தமான நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீர் அள்லது வெந்நீர் கொண்டு வாயைக் கழுவ வேண்டும். இதனால் வாய் எலும்புகளுக்கும், குரல் வளைக்கும் வலிமை உண்டாகுகிறது. நாவுக்குச் சுவை அறியும் சக்தி வளருகிறது. ஆகாரத்தில் ருசி உண்டாகிறது. உதடுகளில் வெடிப்பு உண்டாகாது. பற்கள் தேய்ந்து போகாது. பல் கூச்சம் ஏற்படாது. பற்களுக்கு மிகவும் கடினமான பட்சணங்களைக் கடிக்கும் திறன் கூடுகிறது.
பிகால்களில் எண்ணெயைத் தேய்ப்பதால், கால்களின் சொரசொரப்பு, பிடிப்பு, வறட்சி, ஓய்ச்சல், உணர்ச்சிக் குறைவு இவை உடனே நீங்குகின்றன. மேலும், கால்களுக்கு மிருதுத் தன்மையும் வலுவும் உறுதியும் சேருகின்றன. பார்வை தெளிவு அடைகிறது. வாயுத் தொல்லை நீங்குகிறது. கால் விரல்கள் நுனி முதல் இடுப்பு வரையில் வலி, பிடிப்பு, குத்துவலி இழைகளுடன் கூடிய "க்ருத்ரஸீ' என்னும் வாதநோய் வராது. கால்களில் வெடிப்பும், சிரைகள், நரம்புகள் இவற்றில் சுருக்கமும் உண்டாகாது.
அஷ்டாங்க ஹிருதயம் நூலில்..
குளிர்ந்த பொருள்களுடன் சூடான பொருளையும், புதிய பொருளுடன் பழைய பொருளையும், பச்சையான பொருளுடன் வேக வைத்த பொருளையும் ஒன்றாகக் கூட்டி உண்ணக் கூடாது. பெண்ணிடம் கட்டுப்பாட்டுடன் ஈடுபடுவர்கள் ஞாபக சக்தி, தாரணா சக்தி, ஆயுள், நோயின்மை, வளர்ச்சி, புலன்களின் திறமை, புகழ், வலிமை ஆகியவற்றால் சிறந்தவர்களாக ஆகின்றனர்.
- டி.எம்.இரத்தினவேல்


 

ADVERTISEMENT
ADVERTISEMENT