தினமணி கொண்டாட்டம்

நட்சத்திரங்கள் கார்கள்!

24th Apr 2022 06:00 AM | முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 

கே.ஆர்.ராமசாமியிடம் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட "பாண்டியாக்' கார் இருந்தது. இதன் பேனட்டிலேயே சிகப்பு இந்தியனின் மார்பளவு உருவச் சிலை இருக்கும்.

எம்.கே.தியாகராஜ பாகவதர் பயன்படுத்திய கார் -  பியூக் 8.
என்.எஸ்.கிருஷ்ணனிடம் இருந்த கார் -  கேடிலாக்.
பி.யூ.சின்னப்பாவிடம் இருந்த கார் -  ஃபோர்டு.
டி.ஆர்.மகாலிங்கத்திடம் இருந்த கார்  - செவர்லெ.

தயாரிப்பாளரும், திரைப்பட இயக்குநருமான எஃப். நாகூர் பயன்படுத்திய கார் - பிளைமௌத் இவைகளெல்லாம்  அன்றைய காலகட்டத்தில் விலை உயர்ந்த வசதி படைத்த கார்கள்.

ADVERTISEMENT

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் - அம்பாஸிடர் மட்டுமே.

ஏழைகளோடு ஏழைகளாகத் தான் எளிமையாக இருப்பதையே எம்ஜிஆர் விரும்பினார்.

(கலைமாமணி எஸ்.எம்.உமர் எழுதிய  "கலை உலகச் சக்ரவர்த்திகள்'  என்னும் நூலிலிருந்து)

ADVERTISEMENT
ADVERTISEMENT