தினமணி கொண்டாட்டம்

நீச்சலில் தங்கம்!

24th Apr 2022 06:00 AM

ADVERTISEMENT


2024 நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கையாக மாறியுள்ளார் வேதாந்த். "சாக்லேட் நடிகர்' என்று அன்று பாராட்டப்பட்ட நடிகர் மாதவனின் மகன்தான் வேதாந்த். அண்மையில் கோபன்ஹேகன் நகரில் நடந்த உலகத் தர "டானிஷ் ஓபன்' நீச்சல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வேதாந்த் வென்றுள்ளார்.

800 மீ. தூர நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 1500 மீ. ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வேதாந்த் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

வேதாந்தத்திற்கு 16 வயதாகிறது. 800 மீ. தூரத்தைக் கடக்க முன்பு வேதாந்த் எடுத்துக் கொண்ட 11 .48 கால அளவை இந்தப் போட்டியில்8 .17 ஆக குறைத்துள்ளார்.

டேனிஷ் நீச்சல் வீரரை விட பத்து விநாடிகள் இடைவெளியில் இரண்டாவது இடத்திற்கு தள்ளி வேதாந்த் முதலாவதாக வந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 800 மீ. தூர நீச்சல் போட்டியில் ஒலிம்பிக்ஸ் சாதனை நேரம் 7.42 நிமிடங்கள். உலக சாதனையோ 7 .32 நிமிடங்கள்.

ADVERTISEMENT

ஆம்...! உலக தரத்திற்கு வர வேதாந்த் இன்னும் உழைக்க வேண்டும். வேதாந்த் நீந்துதலில் நல்ல முன்னேற்றம் காட்டி வருவதால்.... ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று நம்பலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT