தினமணி கொண்டாட்டம்

உயர்ந்த மனிதன்!

17th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

உலகத்தின்  உயரமான  மனிதன்  யார் என்பதை கின்னஸ் சாதனை புத்தகம் அறிவித்துள்ளது. கனடா   நாட்டைச் சேர்ந்த ஆலிவர் ரியோஸ்ஸூக்கு   ஏழு அடி ஐந்தரை அங்குல  உயரம் இருக்கிறது. வயது பதினாறு.  கூடைப் பந்தாட்ட  வீரர்.   15  வயதிலேயே  ஆலிவர்  உலகின் மிக உயரமான மனிதர்  என்ற பெருமையைப் பெற்றார். 

கின்னஸ் சாதனை  ஆலிவரின் 16  வது வயதில்  உலகின் மிக உயரமான மனிதர் என்று அங்கீகரித்துள்ளது. ஆலிவர் பெற்றோர்களும்  உயரமானவர்கள். தந்தை ஜீன் ஃபிரான்கோய்ஸ்  ஆறு  அடி எட்டு அங்குலம். தாயான அன்னி  ஆறு அடி ஒரு அங்குல  உயரம் கொண்டவர்கள். சின்ன வயதில் மற்ற சிறுவர்கள் போல  சராசரி உயரத்தில்  இருந்த  ஆலிவர் வளர்ச்சி  கிடுகிடுவென்று   தொடங்கியது 13  ம்  வயதிலிருந்து தான்.  ஆலிவரை மருத்துவரிடம் காட்டியபோது  ஆலிவர் ஆறரை அடி  உயரத்தைத் தாண்டுவார் என்று சொன்னார்களாம். ஒவ்வொரு வருடமும்  பத்து  செ . மீ   உயர்ந்து  ஏழு அடி  ஐந்தரை  அங்குலத்தைத் தொட்டிருக்கிறார்.
பனுஜா
 

ADVERTISEMENT
ADVERTISEMENT