தினமணி கொண்டாட்டம்

3 பாலிவுட் படங்கள்

17th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

ஸ்ரீதேவி, ஹேமமாலினி, வித்யா பாலன் வரிசையில் தென்னிந்தியாவில் இருந்து சென்று பாலிவுட்டில் வலுவாக காலூன்றி வருகிறார் ராஷ்மிகா. 'புஷ்பா' படத்தின் மூலம் அவருக்கு அங்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 'மிஷன் மஜ்னு' என்ற பாலிவுட் படத்தில் முதலில் நடிக்க தொடங்கினார்.  

அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் முன்பாகவே 'குட் பை' படத்தில் ஒப்பந்தமானார். இந்த இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மூன்றாவதாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ரன்பீர் கபூர் நடிக்கும்  'அனிமல்' படத்தில் இணைந்துள்ளார்.  'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இந்தப் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பாலிவுட்டில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில் அடுத்தடுத்து மூன்று படங்களில் ராஷ்மிகா கமிட் ஆகியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT