தினமணி கொண்டாட்டம்

நீண்ட  பயணம்...!

19th Sep 2021 06:00 AM | -ஜெ

ADVERTISEMENT


எண்பதாவது பிறந்த நாளைக் கொண்டாட கேரள திருச்சூர் அத்தானியைச் சேர்ந்த ஜோஸ் கேக் வெட்டவில்லை. மிட்டாய்கள் வாங்கி விநியோகம் செய்யவில்லை. சைக்கிளில் ஏறி உறைபனி சூழ்ந்த ... ஆக்சிஜன் குறைந்த அளவில் இருக்கும் லடாக்கிற்கு கிளம்பிவிட்டார். ஜோஸ் சைக்கிளில் பயணித்திருக்கும் தூரம் 4500 கி. மீ.ஜோஸ் பிளம்பர் ஆக பணி புரிந்தவர். சைக்கிள்தான் அவரது வாகனம்.

கடல் மட்டத்திலிருந்து 17600 அடி உயரத்தில் இருக்கும் லே பகுதியில் சென்றுள்ளார். "லே நகரை அடைந்ததும் அங்கு ஆக்சிஜன் குறைவால் சுவாசிக்க சிரமம் எற்பட்டது. அங்கிருந்த சைக்கிள் பயணிகள் எனக்கு செயற்கை ஆக்சிஜன் தந்து உதவினர். ஜுலை 15-இல் தொடங்கிய பயணம் "லே' வை செப்டம்பர் 10-இல் அடைந்ததுடன் நிறைவானது' என்கிறார் ஜோஸ்.

Tags : Kondattam Long journey
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT