தினமணி கொண்டாட்டம்

4 மொழிகளில் நானி

DIN

நானி நடிக்கும் "ஷியாம் சிங்கா ராய்' இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகவுள்ளது.  

இதுவரை சொல்லப்படாத கதைக் களத்தை தொட்டுள்ள இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன், உயர் தொழில்நுட்ப தரத்துடன் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரித்து வரும் இப்படம்,  இதுவரை வெளியான நானி படங்களிலேயே மிகவும் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படமாக சொல்லப்படுகிறது.  சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள், பெரும் ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.  தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.  

சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகிய மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின்  கதையை சத்யதேவ் ஜங்கா எழுதியுள்ளார். மெல்லிசை பாடல்களின் நிபுணர் மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார், சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் நூலி படத்தொகுப்பை கையாள்கிறார். தேசிய விருது வென்ற கிருதி மகேஷ் மற்றும் மிகவும் திறமையான யாஷ் மாஸ்டர் படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளனர். ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா மற்றும் அபினவ் கோமடம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக படம் திரைக்கு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT