தினமணி கொண்டாட்டம்

கிண்டலடித்த பாவேந்தர்

17th Oct 2021 06:00 AM | -அ.ப.ஜெயபால், சிதம்பரம் 

ADVERTISEMENT

 

ஒரு நாள் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை,  பாவேந்தார் பாரதிதாசனைக் காண அவரது வீட்டிற்குச் சென்றிருந்தார். இருவரும் உரையாடிக் கொண்டிருந்த போது பாவேந்தர் வீட்டுத்தூணில் கையால் தாளம் போட்டார் ராஜரத்தினம் பிள்ளை. 

அந்த மரத்தூணிலிருந்து தாள ஓசை வந்தது. ராஜரத்தினம் பிள்ளை திகைத்துப் போய் "என்ன ஐயா இந்த மரத்தை வீட்டில் வைத்திருக்கிறீர்கள்' என்று கேட்டார். "ஏன் என்ன ஆச்சு' என்று பாவேந்தர் கேட்டவுடன்,  "இந்த மரத்தின் பெயர் ஆச்சா மரம். இதில் தான் நாதஸ்வரம் செய்கிறார்கள். இது வீடுகளுக்கு ஆகாது. ஆச்சா ஆச்சா என எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய்விடும் இது சாஸ்திரம்' என்றார் ராஜரத்தினம் பிள்ளை. 

"ஆமாம்! நான் அதில் சாய்ந்து கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கும் போது இந்த மரம் என்னைப் பார்த்து என்ன கவிதை எழுதி ஆச்சா ஆச்சா என்று அடிக்கடி கேட்கும்'என்று கிண்டலாக கூறி சிரித்தார் பாவேந்தர்.

ADVERTISEMENT

Tags : kondattam Teased Bavender
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT