தினமணி கொண்டாட்டம்

குற்றங்களுக்கான தேடல்....

17th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

கமலா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கிரிமினல்'. மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜானவி  நடிக்கிறார். அறிமுக நடிகர்களும், சில முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடந்து வருகிறது.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் ஆறுமுகம். ""ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். ஒரு குற்றத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அது அந்த மனிதனை எங்கே நிறுத்துகிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். அதை ஒரு கமர்ஷியல் சினிமாவுக்கான சட்டத்துக்கு உட்பட்டு, செய்து முடித்திருக்கிறேன்.  

அறிந்தும் அறியாமலும் அவ்வப்போது செய்கிற தவறுகள்தான் வாழ்க்கையின் திசைகளைத் தீர்மானிக்கும். அது நல்லதோ கெட்டதோ... சில நிமிடங்கள், சில விநாடிகளில் நாம் அதுவரைக்கும் வடிவமைத்து வைத்த மொத்த வாழ்க்கைப் போக்கும் மாறிவிடும். அப்படித்தான் இங்கே ஒரு சூழல்.  இதுதான் இந்த கதையின் அடிப்படை. அதை எல்லோருக்கும் பிடிக்கிற ஒரு கமர்ஷியல் சினிமாவாக கொண்டு வந்திருக்கிறேன். எல்லா மனித சிக்கல்களிலும் காதல் எப்படி ஒரு பங்கு வகிக்கிறதோ, அப்படி இந்த கதை ஓட்டத்திலும், மையப் புள்ளியிலும் ஒரு காதல் உண்டு. காமெடி, ஆக்ஷன், த்ரில்லர் என இந்த கதை வழக்கமான பார்வைதான். ஆனால் அதையும் தாண்டிய சுவாரஸ்யங்கள் ஒளிந்து கிடக்கின்றன'' என்றார் இயக்குநர்.  

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

ADVERTISEMENT

Tags : kondattam Search for crimes ....
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT