தினமணி கொண்டாட்டம்

நரேனின் "குரல்'

17th Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

நரேன் நடிக்கும் "குரல்' படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.  "சித்திரம் பேசுதடி', அஞ்சாதே' என ஒரு பக்கம் கதாநாயக பிம்பம்,  கைதி போன்ற படங்களில் கதாபாத்திர பிம்பம் என கலவையாக நடித்து வருகிறார் நரேன்.  தற்போது நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நரேன்,  பிரபல மலையாள இயக்குநர் சுகீத் இயக்கத்தில் "குரல்' படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குநர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.  ஷ்ரதா சிவதாஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.   இவர் "தில்லுக்கு துட்டு-2' படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரசிகர்களை கவரும் விதத்தில் இந்த திரைப்படத்தின் த்ரில்லர் காட்சிகள் அட்டகாசமாக உருவாகியுள்ளது. குறிப்பாக நரேனின் மாறுபட்ட தோற்றமும்ó, நடிப்பும் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT