தினமணி கொண்டாட்டம்

சைவ சித்தாந்த வித்தகர்

17th Oct 2021 06:00 AM | -கள்ளிப்பட்டி குப்புசாமி

ADVERTISEMENT

 

தமிழ் வளர்த்தவர்களில் முக்கியமானவர் கதிரேசன் செட்டியார். இவரது மூன்றாவது வயதில் இவருக்கு வாதநோய் தாக்கியது.

இதன் காரணமாக கதிரேசனுக்கு ஒரு கால் ஊனமுற்றது. ஐந்து வயதானவுடன் தனது வயது ஒத்தவர்களெல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதைப் பார்த்த கதிரேசன், தனது தாயாரிடம் தன்னை பள்ளி சேர்க்குமாறு கேட்டார். ஆத்திச்சூடி, உலகநீதி, கொன்றை வேந்தன், நீதிநெறி விளக்கம் போன்ற நீதி நூல்களையெல்லாம் கற்றுக்கொடுத்தார். ஆர்வத்துடன் தமிழ் கற்ற கதிரேசன் பல தமிழ் இலக்கண நூல்களை ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்தார்.

வட மொழியிலும் தேர்ச்சி பெற்ற கதிரேசன் சைவ சமய நூல்களையும் கற்று புலமை பெற விரும்பினார். இதன் காரணமாக காரைக்குடி சொக்கலிங்கத்திடம் மாணவராக சேர்ந்து இரண்டாண்டுகள் கற்றார். இதன் மூலம் செய்யுள் இயற்றும் ஆற்றலைப் பெற்றார். 1934-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராகப் பணியினை ஏற்றார். பணியின் மூலம் கிடைத்த ஊதியத்தின் பெரும் பகுதியைக் சன்மார்க்க சபையைத் தொடங்கி தொண்டுகள் பல புரிந்தார்.

ADVERTISEMENT

இதன் காரணமாக சைவ சித்தாந்த வித்தகர் என்று அழைக்கப்பட்டார். கதிரேசனார் இருமொழி அறிஞராக இருந்தார். இதனால் சாகுந்தலம்- சிலப்பதிகாரம் இந்த இரண்டில் சிலப்பதிகாரம் சிறந்தது என்றும், வால்மீகி ராமாயணம் - கம்பராமாயணம் இரண்டில் கம்பராமாயணமே சிறந்த்து என்றும் நிலை நிறுத்தித் தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர். இவருக்கு மகா மகோபாத்தியாயர் எனும் பட்டம் 1942-ஆம் ஆண்டில் அரசால் வழங்கப்பட்டது. 

Tags : kondattam சைவ சித்தாந்த வித்தகர்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT