தினமணி கொண்டாட்டம்

நெருக்கடியை உருவாக்கிய பணம்

3rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

செளத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "கடத்தல்'. "காத்தவராயன்', "காந்தவர்வன்' படங்களை இயக்கிய சலங்கை துரை இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார். எம். ஆர். தாமோதர், விதிஷா, சிங்கம் புலி, பாபு தமிழ் வாணன், ஆதி வெங்கடாச்சலம், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... ""ஹாலிவுட்டில் "ஹிஸ்ட் ஜானர்' என்று ஒரு பாணி உண்டு. கடத்துவதற்கான திட்டங்கள் நிறைய இந்த படங்களில் இருக்கும். அது மாதிரி ஒரு படம் இயக்க நினைத்து எழுதியதுதான் இது. இங்கே ஒருவனுக்கு பணம் மீது அத்தனை வெறி. பணத்துக்காக எதையும் செய்ய துணிந்தவன். எதற்காக அவனுக்கு இவ்வளவு வெறி, வேட்கை... இதைச் சொல்லுவதுதான் படம். பணம், மக்கள் மத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது. அன்பாக வாழ்வதை விட இங்கே பணக்காரனாக வாழத்தான் எல்லாரும் ஆசைப்படுகிறார்கள். எல்லாருக்குமே நாளைக்குக் காலையில் பணக்காரன் ஆகி விட வேண்டும் என்று ஆசை. மாதத்துக்கு ஒன்று, ஏரியாவுக்கு ஒன்று என நடந்த மோசடி வேலைகளை பேப்பரில் படித்து, அது தொடர்பான ஆட்களைச் சந்தித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொள்ளையர்கள், அவ்வளவு புத்திசாலிகள். நிலப்பரப்பு, மக்களின் மனநிலை, பிராந்தியத்தின் பொருளாதாரம் எல்லாவற்றையும்கணித்துதான் வெளியே வருகிறார்கள்.அப்படிப்பட்ட ஒருவனின் கதைதான் இது'' என்றார் சலங்கை துரை. சென்னையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT