தினமணி கொண்டாட்டம்

எதிர்ப்பு சக்திக்கான எளிய வழிமுறை

3rd Oct 2021 06:00 AM | -என்.தமிழ்செல்வன்

ADVERTISEMENT

 

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கபசுர குடிநீர், அமுக்கரா மாத்திரை, தாளிசாதி வடகம், பிரம்மானந்த பைரவம் மாத்திரை, ஆடாதோடை மணப்பாகு ஆகிய மருந்துகள் கரோனா தீநுண்மியை எதிர்கொள்வதில் முழுமையாக வெற்றி பெற்றிருப்பது சித்த மருத்துவக்குழு நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

அறிவியல் ஆராய்ச்சிகளுடன் கூடிய சித்த மருத்துவர்களின் அணுகுமுறை உலக மக்களை சித்த மருத்துவம் நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்கிறார் வேலூர் மாவட்ட சித்த மருத்துவர் சோ.தில்லைவாணன்.

""தமிழகத்தில் பல்வேறு வைரஸ் தொற்றுகளின் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பதில் சித்த மருத்துவம் பக்கபலமாக இருந்து வருகிறது. சிக்குன்குனியா தொற்றின் போது நிலவேம்பு குடிநீர், அமுக்கரா, பிண்ட தைலம் போன்ற சித்த மருந்துகளின் பங்கு அளப்பரியது. டெங்கு காய்ச்சலின் போது இறப்பு விகிதத்தை குறைத்ததும் நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறு, ஆடாதோடை மணப்பாகு ஆகிய மருந்துகள்தான். பன்றிக்காய்ச்சல் தொற்றின் போதும் கப சுர குடிநீர் நல்ல பலனை கொடுத்தது. தொடர்ந்து, கரோனா முதல் அலையில் நோயின் தன்மை குறித்து சரியான புரிதல் இல்லாதபோதே சித்த மருத்துவம் நேர்த்தியான பங்களிப்பை அளித்தது. ''
மூன்றாம் அலை பாதுகாப்பு முறைகள் என்ன ?

ADVERTISEMENT

முதல் இரண்டு அலையில் பின்பற்றப்பட்ட முறையான வழிமுறைகளை மூன்றாவது அலையிலும் பின்பற்றினால் பாதிப்புகளை தடுக்க இயலும். தடுப்பூசி செலுத்தி கொள்வது மிக அவசியம். அத்துடன் இயற்கையாக நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளையும், சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வது சிறப்பு. பொது இடங்களில் முகக்கவசம் அவசியம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் கட்டாயமல்ல. கை சுத்தமாக்கும் முறையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் சோப்பினால் கை கழுவுதல் நல்லது . அவர்களின் கை மென்மையானதால் கை தூய்மையாக்கும் திரவத்தால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு அதிகம். கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்ப்பதும் நல்லது.

குழந்தைகளை தாக்குமா ?

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி புழக்கத்தில் இன்னும் வராததாலும், இயல்பாகவே குழந்தைகளுக்கும் , சிறுவர்களுக்கும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு என்பதாலும், மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் குழந்தைகளுக்கு இணை நோய்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் அப்படி வந்தாலும் பாதிப்பு லேசானதாகவும், இறப்பு விகிதம் மிக மிக குறைவாகவே இருக்கும் என்பதால் வருத்தப்பட தேவை இல்லை.

அனைத்து தரப்பினருக்குமான மருத்துவ ஆலோசனைகள் என்ன ?

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உரை மாத்திரை எனும் சித்த மருந்தும்,சிறியவர் முதல் பெரியவர் வரை நிலவேம்பு குடிநீருடன் ஆடாதோடை மனப்பாகு ஆகிய சித்த மருந்துகளையும் எடுக்கலாம். அமுக்கரா எனும் சித்த மருத்துவ மூலிகை சேர்ந்த மருந்தினை அனைத்து வகையினரும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க பயன்படுத்தலாம். மேற்கூறிய ஆய்வு செய்யப்பட்ட சித்த மருந்துகளை அனைத்து வயதினரும் குறிகுணத்திற்கு ஏற்றாற் போல் மருத்துவர் ஆலோசனைப்படி எடுக்க நல்ல பலன் தரும். நுரையீரல் வன்மைப்படுத்தும் மருந்துகளையும், திருமூலர் மூச்சு பயிற்சியும் செய்வது அவசியம். வாரம் இருமுறை தூதுவளை ரசம் எடுத்துக்கொள்ள நுரையீரலுக்கு நன்மை தரும். முருங்கை கீரை ரசம் , விட்டமின்களும்,இயற்கை நிறமிகளும் உள்ளதால் நோய் எதிர்ப்புசக்தியை ஏற்படுத்தும்.மேலும் இது வைரஸ்களில் ப்ரோடியேஸ் எனும் நொதியினை செயல்படவிடாமல் தடுக்கும்.

உரை மாத்திரை, அதிமதுர சூரணம், தாளிசாதி சூரணம், திரிகடுகு சூரணம், நெல்லிக்காய் லேகியம் எனும் சித்த மருந்துகள் மிக எளியது, பக்க விளைவுகளற்றது. மேலும் பால சஞ்சீவி மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, கோரோசனை மாத்திரை , தயிர்ச்சுண்டி சூரணம், நாக பற்பம், பவள பற்ப மாத்திரை, வசந்த குஸூமகரம் மாத்திரை, திப்பிலி ரசாயனம், போன்ற பல சித்த மருந்துகள் நல்ல பலன் தரும் .இவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பாலில் மஞ்சள் பொடி சேர்த்து கொடுப்பதும் எதிர்ப்புசக்தி தரும் எளிய வழிமுறை என்றார்.

Tags : kondattam mechanism for resistance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT