தினமணி கொண்டாட்டம்

கவிமணிக்குப் பிடித்த உணவு

3rd Oct 2021 06:00 AM | -உ.ராமநாதன்

ADVERTISEMENT

 

ஒரு சமயம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் நண்பர் ஒருவர், குமரி மாவட்டம் புத்தேரி கிராமத்திற்கு வந்து கவிமணியிடம் இலக்கியம், சமுதாயம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பேச்சின் இடையே கவிமணியிடம்  "தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு எது?' என்று கேட்டார்.

அதற்கு கவிமணி "நெல்லை மாவட்ட எல்லையிலுள்ள ஆரல்வாய்மொழி கிராமத்தில் கிடைக்கும் அரைக்கீரையை அவித்து கடைந்து வைக்கும் கீரைக்கறி மிகவும் பிடிக்கும். அது சத்துமிக்கது. ஆரோக்கியத்திற்கு நல்லது' என்று கூறியதோடு ஆரல்வாய்மொழி கீரையைப் போற்றி தான் எழுதிய வெண்பாப்  பாடலைப் பாடிக்காட்டினார். அந்த வெண்பா இதோ: 

""பச்சடியும் தீண்டேன். பருப்பினுலும் கைவையேன். கிச்சடியும் தீண்டேன். கிழங்கும் எடேன். மெச்சு புகழ் ஆரைப்பதியில் அவித்துக் கடைந்து வைத்த கீரைக்கறி கிடைக்கு மேல்''.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT