தினமணி கொண்டாட்டம்

முதல் கட்டணம் 

3rd Oct 2021 06:00 AM | -முக்கிமலை நஞ்சன்

ADVERTISEMENT

 

பேரறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் டாக்டருக்கு படித்து முடித்து பட்டம் பெற்று வீடு வந்தார். தந்தையிடம் சென்று ஆசீர்வாதம் வழங்க கோரினார்.

வாழ்த்துகள் சொன்ன அண்ணா, "தனக்கு ஜுரம் இருப்பதாகவும் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுக்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

தந்தை சொன்னபடி டாக்டர் மகனும் பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்தார். உடனே அண்ணா தன் சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார்.

ADVERTISEMENT

"இது உனக்கு ஆசீர்வாதமாக தரப்படுவது மட்டுமல்ல ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதற்கான உன் முதல் நோயாளியின் பீஸ் கட்டணம் இது' என்றார் அண்ணா.

Tags : Kondattam First charge
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT