தினமணி கொண்டாட்டம்

இணையத்தை கலக்கும் ஆல்பம்

3rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

சினிமாவில் குறும்படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது போல், இசையில் தனி இசை ஆல்பங்கள் உருவாகிகொண்டே இருக்கின்றன. சினிமாவில் உச்சம் தொட்ட இசையமைப்பாளர்கள் செய்ய முடியாத சில அதிர்வுகளை இந்த வகை ஆல்பங்கள் கொண்டு வந்து விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது இடம் பிடித்துள்ளார் இசையமைப்பாளர் ராஜேஷ். "ஜீவன்'  என்ற பெயரில் இவர் உருவாக்கி இருக்கும் இசை ஆல்பம் இணையத்தில் பெரும் ஹிட் அடித்துள்ளது. இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் வி.ஆர்.ராஜேஷ், இதில் நடிகராக அவதாரம் எடுத்துள்ளர். ஜீவன்என்ற தலைப்பில் விடியோ இசை ஆல்பத்தை தயாரித்து இசையமைத்திருப்பதோடு, ஆல்பத்தின் முதன்மை கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இதில் ராஜேஷுக்கு ஜோடியாக தீப்தி ராஜ் நடித்துள்ளார். டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த இசை ஆல்பத்தின் பாடலை சாய்சரண் பாட, எஸ்.என்.பாசில் இயக்கியிருக்கிறார். சமூக சிந்தனையோடு உருவாகியிருக்கும் ஜீவன் இசை ஆல்பம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக  இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் ஸ்ரீ, பாடலாசிரியர் விவேகா, நடிகர் சாம்ஸ், நடிகை வினோதினி ஆகியோர் கலந்து கொண்டு ஆல்பத்தை வெளியிட்டனர். 

Tags : Kondattam Album that mixes the internet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT