தினமணி கொண்டாட்டம்

60 லட்சம் பேர்  பார்த்து வியந்தது

3rd Oct 2021 06:00 AM

ADVERTISEMENT

 

வருடத்திற்கு இரண்டு நாள் விளக்கு மட்டும் மாற்றி அதன்மூலம் ரூ.28 லட்சம் சம்பாதித்து வருகிறார், இளைஞர் ஒருவர். அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ஒரு அமெரிக்கர்.

கெவின் எனப் பெயர் கொண்ட அவர், வெறும் விளக்கு மாற்றுவதற்காக இவ்வளவு சம்பளமா? அவர் விளக்கு மாற்றுவது ஒன்றும் வீட்டிலோ அல்லது கம்பெனியிலோ இல்லை 1500 அடி உயரத்தில் அமெரிக்காவில் சவுத் டக்கோடா என்ற பகுதியில் 1500 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் உள்ளது.

இந்த டவரின் உச்சியில் தான் மின்விளக்கு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்த மின்விளக்கை மாற்றியமைக்க வேண்டும். வருடத்துக்கு இரண்டுமுறை மட்டும் இந்த வேலையை செய்ய வேண்டும். ஆனால் இந்த வேலைக்கு யாரும் முன்வரவில்லை. ஏனென்றால், 1500 அடி உயரம் உள்ள அந்த டவரில் ஏறி பணிபுரிய யாரும் முன் வரவில்லை. வழக்கமாகவே உயரம் என்றால் பலருக்கு அது பயத்தை கொடுக்கும். இதனால் யாரும் முன்வராத நிலையில், கெவின் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

1500 மீட்டர் உயரம் உள்ள அந்த டெலிபோன் டவரின் உச்சியிலிருந்து பார்த்தால் இருபது கிலோ மீட்டர் தூரத்திற்கு நன்றாகவே தெரியும். இந்த டவரில் ஏறி வருடத்துக்கு இரண்டு முறை மின்விளக்கை மாற்றி வருகிறார் கெவின். வருடத்தில் இரண்டு நாள் வேலைக்காக அவர் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊதியமாக பெறுகிறார். இந்த தொகையின் இந்திய மதிப்பு ரூ.28 லட்சம். இந்தப் பணி தொடர்பாக கெவின் சொன்னார்.

"இந்தப் பணி சவால் நிறைந்த ஒன்று. இவ்வளவு உயரத்திற்குச் செல்லும்போது பதட்டம் நிறைய இருக்கும். நான் 1500 அடி உயரத்தில் பணிபுரியும் போது மூன்று வகையான காலநிலை மாற்றத்தையும் பார்த்துள்ளேன்' எனக் கூறும் அவர், கடந்த எட்டு ஆண்டுகளாக அனைத்து விதமான டவர்களிலும் ஏறி வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் தான் கெவின் 457 மீட்டர் உயர டவரில் ஏறிவேலை பார்ப்பதை சில ஆண்டுகள் முன் ஒருவர் ட்ரோன் மூலம் விடியோ எடுத்து இணையத்தில் வெளியிட அது வைரலாகியது. இந்த விடியோ வெளியிட்ட 48 மணி நேரத்திலேயே 60 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

Tags : Kondattam 60 lakh people were amazed to see
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT