தினமணி கொண்டாட்டம்

ஊதியத்தில் வேறுபாடு ஏன்?

28th Nov 2021 06:00 AM | மாதவன்

ADVERTISEMENT


அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1963-இல் ஆண்-பெண் இருபாலருக்கும் சம அளவு சம்பளம் எனும் சட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனாலும் பெயரளவில் இந்த சட்டம் அமலில் இருந்தாலும், அது நடைமுறையில் இல்லை. ஆண்களைவிட 108 நாள்கள் அதிகமாக வேலை செய்தால் தான் பெண்கள் ஆண்களுக்குச் சமமான ஆண்டு வருமானத்தைப் பெற முடியும்  என பிரபல அமெரிக்க பத்திரிகை கூறுகிறது. 

பெண்கள் நிர்வாகத் தலைமை அமைப்பாளர் சிண்டி குஷர், ஆண்கள் தங்களுக்கு அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் பெண்கள் வாய் திறந்து கேட்க மாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுநர்கள், கிளாடிய கோல்டைன், லாரன்ஸ் போன்றோர் ஆராய்ந்து பார்த்ததில் பெண்கள் தொடர்ந்து பணியில் இல்லாமல் போய்விடும் காரணத்தால் அவர்களுக்கு சம்பளம் குறைவானதாகவே நிர்ணயிக்கப்படுகிறது என்கிறார்கள். 

(2050-இல் பெண்கள் என்ற நூலிலிருந்து)

ADVERTISEMENT

Tags : kondattam difference in pay
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT