தினமணி கொண்டாட்டம்

சிறப்புத் தோற்றத்தில் விஜய்சேதுபதி

28th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் - எல். எல். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் "மைக்கேல்'.

சந்தீப் கிஷன் கதையின் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி எழுதி இயக்குகிறார்.

முன்னணி இயக்குநரும், நடிகருமான கெüதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கிறார். நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தனி முத்திரை படைத்து வரும் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதியுடன் கெüதம் வாசுதேவ் மேனனும் இந்த படத்தில் இணைந்திருப்பதால் இந்தப் படத்துக்கு மல்டி ஸ்டார் அந்தஸ்து கிடைத்துள்ளது. சந்தீப் கிஷன் புரட்சிக்கரமான எழுத்தாளர் ஒருவரின் தீவிர ஆதரவாளராக நடிக்கிறார். "மைக்கேல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தோய்ந்த கையும், கைவிலங்கும் இடம்பெற்றிருந்தது. இது படத்தின் கதாபாத்திரங்களைப் பற்றி ரசிகர்களிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி, வரவேற்பையும் பெற்றது.

ADVERTISEMENT

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி "மைக்கேல்' படத்திற்கு வித்தியாசமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தை தயாரிப்பாளர்கள் பரத் செüத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் தயாரிக்க, நாராயண் தாஸ் கே நரங் வழங்குகிறார். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அடுத்தடுத்த கட்டங்களில் விஜய்சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT