தினமணி கொண்டாட்டம்

இந்திய சினிமாவில் முதல் 3 டி

28th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT


மௌனப் படம், பேசும் படம்,  கருப்பு வெள்ளை படம், கலர் படம்... என சினிமா காலத்துக்கு ஏற்றவாறு தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. இப்போது 3 டி தொழில்நுட்ப காலத்துக்குள் வந்திருக்கிறது சினிமா.

இந்திய சினிமாவில் முதன்முறையாக 3 டி  தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் "கிரவுன்'. கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சீனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் ஹிந்தி, தெலுங்கு, தமிழ்  திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.

படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார்.  இவர் மலேசியாவில் வசித்து வரும் தமிழர் ஆவார். 

ADVERTISEMENT

ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள்.  இப்படத்திற்கு மரியா ஜெரால்டு இசையமைக்கிறார். தீலிப் சுப்ராயன் சண்டை பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார்.

கலை இயக்குநர் ரேம்போன் பால்ராஜ். படத்தொகுப்பாளர்  ஜெய ராஜேந்திர சோழன். பல ஹாலிவுட்  படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வி.ஜானகிராமன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.  

வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்குமெண்டெட் ரிலிடி, வேர்ச்சொல் புரொடக்ஷன் ஆகிய தொழில் நுட்பங்களைக் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் 3 டியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை கியுபிரேம் மூவி  சார்பில் டாக்டர் அரவிந்த். ஓ மற்றும் ஒயிட் சாண்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

Tags : kondattam The first 3D in Indian cinema
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT