தினமணி கொண்டாட்டம்

மாணவர் கட்டிய பாலம்!

28th Nov 2021 06:00 AM | -ஈஸ்வரன்

ADVERTISEMENT

 

மும்பையில் 17 வயது மாணவர். அவர் செய்து இருக்கும் செயலால் வடக்கு மும்பையில் ஒரு திடீர் ஹீரோவாக உருவாகியிருக்கிறார்.

மும்பை சாதே நகரில் ஒதுக்குபுறமாக ஒரு சேரி பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டுமெனில் சேரிப் பகுதியை ஒட்டியுள்ள 50 அடி நீள சாக்கடையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.

இதனை சாதே நகரில் அடுக்கு மாடியில் வசிக்கும் 17 வயது இஷான் பல்பாலே என்கிற இளைஞன் தினசரி பார்த்திருக்கிறார். சீருடை அணிந்த குழந்தைகள் சாக்கடையில் இறங்கி பள்ளிக்கு செல்வதை பார்த்து தனது பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் சமூக அமைப்பினர்களிடமும் முறையிட்டு இருக்கிறார். உள்ளூர் நகராட்சிகளிடமும் இந்த விஷயம் சென்று இருக்கிறது. எதுவும் நடக்கவில்லை.

ADVERTISEMENT

வெறுத்துப்போன இஷான் தனது சேமிப்புப்பணம், நண்பர்களிடம் கடன் என பெரும் பணம் திரட்டி சேரி குழந்தைகள் சாக்கடையை கடக்க 50 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாலத்தையே கட்டிவிட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு சிவில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவன் என்பதால் தனது முதல் புராஜெக்டைபட்டம் வாங்காமலேயே செய்து அசத்தி உள்ளார். முழுக்க முழுக்க மரக்கட்டைகளைக் கொண்டே எட்டு நாட்களில் இந்த பாலத்தை கட்டிவிட்டார். தற்போது பள்ளிக் குழந்தைகள் மட்டுமின்றி குடியிருக்கும் 15,000 மக்களுக்கும் இந்த பாலம் தான் சாக்கடையை கடக்க உதவி 
செய்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT