தினமணி கொண்டாட்டம்

கன்னத்தில் அறைய  கைநிறைய சம்பளம்...!

28th Nov 2021 06:00 AM | சக்ரவர்த்தி

ADVERTISEMENT

 

தற்காப்பிற்காகச் சம்பளம் கொடுத்து ஆளை வைப்பார்கள். பெருந்தொகை கொடுத்து எதிரியை தாக்கச் செல்வார்கள். தன்னைக் கன்னத்தில் அறைய ஒருவரை சம்பளத்திற்கு அமர்த்துவார்களா?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணீஷ் சேத்தி, தான் "முகநூலை' பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் "பளார்' என்று அறைய பெண் ஒருவரை ஊதியம் கொடுத்து வேலையில் அமர்த்தியுள்ளார்.

மணீஷ் சேத்தி அமெரிக்காவில் சொந்தமாக தொழில் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். ஆனால் தொழில் சரிவர நடக்கவில்லை. லாபமும் பெரிதாக இல்லை. இதற்கு என்ன காரணம் என்று மூளையை மணீஷ் கசக்கிக் கொண்டபோது, தான் தொழில் நடக்காததற்கு காரணம் வேறு யாருமல்ல' என்ற முடிவுக்கு வருகிறார். மணீஷ் சதா முகநூல் பதிவுகளில் மூழ்கிக் கிடப்பதால், நிர்வாகத்தில் கவனம் செலுத்த இயலவில்லை என்பதை உணர்ந்தார்.

ADVERTISEMENT

"இனிமேல் முகநூல் பக்கம் போகக் கூடாது...' என்று பல முறை உறுதி எடுத்தாலும், முகநூலை ஒதுக்கி வைக்க மணீஷால் இயலவில்லை. அந்த அளவுக்கு மணீஷ் முகநூலுடன் ஒன்றிப் போயிருந்தார்.

என்ன செய்தால் இந்த பழக்கத்தை நிறுத்த முடியும் என்று பலமுறை யோசித்து இறுதியில் தன்னைக் கண்காணிக்க ஒருவரை சம்பளம் கொடுத்து நியமித்தால் நல்லது என்ற முடிவுக்கு வந்தார். ஒரு பெண்ணையும் நியமித்தார். "அலுவலக நேரங்களில் எனது பக்கத்தில் அமர்ந்து நான் முகநூல் பக்கத்தைப் பார்க்கிறேனா என்று தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். மறந்து போய் பழக்க தோஷத்தில் முகநூல் பக்கத்தை நான் திறந்தால் முதலாளி என்றும் பாராமல் "முகநூலைப் பார்க்கக் கூடாது' என்று சொல்கிற மாதிரி கன்னத்தில் "பளார்' என்று அறைவிட வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

அந்தப் பெண்ணிற்கு ஒரு மணி நேரத்திற்கு 8 டாலர்கள் சம்பளத்தையும் கொடுத்து வந்தார். அவ்வப்போது அந்தப் பெண் மணீஷை அறைந்தும் வந்தார்.

"அறைகள் வாங்கிய பிறகும் முகநூல் பக்கம் போனால் மேலும் அறை விழும்' என்ற பயத்தில் மணீஷ் முகநூல் பக்கம் போகவில்லை. சொந்த அலுவலக நிர்வாகத்தில் கவனம் செலுத்தினார். அதனால் வர்த்தகம் அதிகரித்து. மணீஷ் தொழில் நடத்துவதில் வெற்றி கண்டார். லாபமும் பெருகியது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது!

இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை அறிந்த "டெஸ்லா' மற்றும் "ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், "நாமும் இப்படி ஒரு ஆளை வேலையில் அமர்த்தினால்தான் சரிப்படும் போலிருக்கு' என்று பதிலுக்குக் கிண்டலாகப் பதிவிட... அதுவும் வைரலாகியுள்ளது...! தொழில் நிர்வாகிகள் எப்படியெல்லாம் மாத்தி யோசிக்கிறார்கள்...!

Tags : kondattam slap on the cheek
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT