தினமணி கொண்டாட்டம்

காமராஜரின் தன்னடக்கம்

28th Nov 2021 06:00 AM | துரை.இராமகிருஷ்ணன், எரகுடி 

ADVERTISEMENT

 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. அப்போது ஒரு காங்கிரஸ்காரர் காமராஜரிடம் வருத்தமாக மக்களுக்காக நீங்கள் எவ்வளவு சேவை செய்திருந்தீர்கள்? அப்படி இருந்தும் நீங்கள் வெற்றி பெற தேவையான வாக்குகள் விழவில்லையே!

"என்ன காரணம் என யோசித்தீரா?'  என கேட்க, "அவர் எதிர்க்கட்சிக்காரர்கள் ஓயாத பிரசாரத்தின் மூலம் நம்மை வீழ்த்திவிட்டனர்' எனவும் அந்த காங்கிரஸ்காரர் தெரிவித்ததோடு காமராஜரிடம் "நன்மைகள் எவ்வளவு செய்திருக்கிறோம் என்று நீங்கள் பிரசாரத்தில் கூட விவரமாக தெரிவிக்கவில்லை என்றும் நீங்கள் தோற்றதற்கு அதுவே காரணம்!' என்றார்.

அதற்கு உடனே காமராஜர் "அட போய்யா! பெத்த தாய்க்குச் சேலை வாங்கித் தருகிற மகன், எங்கம்மாவுக்கு நான் சேலை வாங்கி தந்தேன் என தம்பட்டம் அடிக்கலாமான்னேன். நமது கடமையைத் தானேய்யா நாம் செஞ்சோம்? அதில் தெரிவிக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?' என்றார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT