தினமணி கொண்டாட்டம்

ஜான்வி ஆலோசனை

28th Nov 2021 06:00 AM

ADVERTISEMENT


போனி கபூர் -  ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர்  பாலிவுட்டில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், சம்பளம் பற்றி கவலைப்படாமல் நடிப்பேன் என்று தன் தோழிகளிடம் சொல்லி இருக்கிறார்.

மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தால், இங்குள்ள மீனாவின் வீட்டுக்கு விஜயம் செய்யும் ஜான்வி கபூர், தமிழில் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்தால் முன்னணி இடம் பிடிக்க முடியும் என்பது உள்பட பல விஷயங்களுக்கு அவரிடம் ஆலோசனை கேட்கிறார்.

போனி கபூர் தமிழில் தயாரித்த "நேர்கொண்ட பார்வை', "வலிமை' ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடிக்க இயக்குநர் ஹெச்.வினோத் கேட்டபோது மறுத்துவிட்ட அவர், அஜித்குமார் ஜோடியாக நடிக்க கேட்டால் கால்ஷீட் தருவதாக சொல்லி இருக்கிறார். தற்போது ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் குமார் இணையும் மூன்றாவது படத்தின் மூலமாக ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிப்பாரா  என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.

வரும் பொங்கல் பண்டிகைக்கு "வலிமை' படம் திரைக்கு வருகிறது. இதன் பின் இந்த புதிய படத்தின் அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது. அப்போதுதான் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிப்பாரா என்பது தெரிய வரும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT