தினமணி கொண்டாட்டம்

சம்பாதிக்க நெருக்கடி!

28th Nov 2021 06:00 AM | -வி

ADVERTISEMENT

 

எம்.ஜி.ஆர் தனது இளமைப்பருவத்திலேயே, நடிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார்.

அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்க நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், தனது  பெயரை முதல்முறையாக "ஒரிஜினல் பாய்ஸ்' என்ற நாடக குழுவில் பதிவு செய்தார்.

அவருடைய சகோதரரும் இந்த குழுவில் உறுப்பினராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு, நாடகத்தில் நடிப்பதை விட்டுவிட்டு, 1935-இல் தமிழ் திரையுலகில் சேர்ந்தார். 1936-இல் "சதிலீலாவதி' என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார். 1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT