தினமணி கொண்டாட்டம்

டூப் இல்லாமல் சோனியா அகர்வால்

DIN


எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும். ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம்  நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும். இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய் படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

"கிராண்மா' படக்குழு. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார். பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடிக்கின்றனர். மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடிக்கிறார். குழந்தை நட்சத்திரம் பெளர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பேய் படங்கள் என்றால் கிராபிக்ஸ் தரமாக இருக்க வேண்டும். அதனை நோக்கமாக வைத்து கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியுள்ளது படக்குழு. சர்வதேச தரத்தில் வரவேண்டும் என்பதற்காக மிகுந்த பொருட்செலவில் காட்சிகளை உருவாக்கியுள்ளனர்.  கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார். ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே , எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT