தினமணி கொண்டாட்டம்

மக்கள் சேவை முக்கியம்

DIN

அஸ்வினி நாயுடு தயாரிப்பில் உருவாகி வரும் படம்  "இக்ஷூ'. ராம் உள்ளிட்ட புதுமுகங்கள் நடிக்கின்றனர்.  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் வி.வி.ருஷிகா. விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். "இக்ஷý' என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு "கண்' என்றும் "சிவன்' என்றும் அர்த்தப்படுத்தலாம். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார்.  

அவர் பேசும் போது.... ""காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப் போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். அவர்களும் புகழுக்கும் போற்றுதலுக்குரியவர்கள் என்பதை இங்கு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை. சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது. நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம்.'' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

SCROLL FOR NEXT