தினமணி கொண்டாட்டம்

கரோனா விழிப்புணர்வு

16th May 2021 06:00 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் ராஜமெüலி இயக்கத்தில் "ஆர்ஆர்ஆர்'  எனும் பிரம்மாண்ட படம் உருவாகி வருகிறது. ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது. தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர், கரோனா விழிப்புணர்வு குறித்து வெளியிட்டுள்ள விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

""நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். மூன்று விஷயங்களைக் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். முகமூடிகள் அணிவது, சமூக விலகல் மற்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் என்பதைப் பின்பற்ற வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர். நடிகர்கள் ராம் சரண், என்.டி.ஆர் ஜூனியர், ஆலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெüலி ஆகியோர் அந்த விடியோவில் இடம் பெற்றுள்ளனர்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் மக்கள் முகக்கவசம் ஒழுங்காக அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, ஒவ்வொருவருடனும் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தங்கள் கைகளைத் கழுவுவது, வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்றவற்றைக் கடைபிடிக்கவும் கேட்டுக்கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT