தினமணி கொண்டாட்டம்

இரு சிறுகதைகள் இணையும் புள்ளி

2nd May 2021 06:25 PM

ADVERTISEMENT

 

"இன்ஷா அல்லாஹ்' என்கிற இரு சொற்கள் இஸ்லாமியர்களின் வாழ்க்கையுடன் பின்னணிப் பிணைந்தவை. "இறைவன் விரும்பினால்' என்று பொருள்படும் இச்சொற்களையே தலைப்பாகச் சூட்டி, "இஸ்லாமிய வாழ்க்கைமுறையை' பேசும் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன். இவரை, "உலக சினிமா' பாஸ்கரன் என்று சொன்னால் சினிமா வட்டாரத்தில் தெரியவரும்.  உலகம் முழுவதும் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட "இன்ஷா அல்லாஹ்', இதுவரை 7 விருதுகளைப் பெற்றிருப்பதுடன், 25 படவிழாக்களில் "அஃபீஷியல் செலக்ஷன்' என்கிற கெளரவத்துடன் திரையிடப்பட்டுள்ளது. 
படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" தமிழ் இஸ்லாமியர்களைப் பற்றி, ஒரு முழுமையான சினிமா தமிழில் வரவில்லை. இது, தமிழ் நாட்டில் வாழும் 42 லட்சம் இஸ்லாமிய மக்களின் மனக்குறை மட்டுமல்ல, சினிமாவை நேசிக்கும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும்தான். அதை நிறைவு செய்யவும் இஸ்லாமியர் வாழ்க்கைமுறையை அனைத்து சமூக மக்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் இந்தத் படத்தை உருவாக்கியிருக்கிறேன். "சிறந்த இஸ்லாமியத் திரைப்படம்' என்கிற விருதை இந்தோனேசியா, கலிபோர்னியா சர்வதேசத் திரைப்பட விழாக்களில் "இன்ஷா அல்லாஹ்' வென்றுள்ளது எங்கள் படைப்பின் நோக்கத்துக்கான முதல் அங்கீகாரமாக அமைந்தது.  மரணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை இறைவன் விருப்பத்தின் பேரில் கட்டமைக்கப்படுகிறது என இஸ்லாம் நெறிமுறைகள் வலியுறுத்துகின்றன. அதையே படத்தின் கதைக் கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கலாம் என்று நவீனத் தமிழ் இலக்கியத்தை வாசித்தேன். மறைந்த இலக்கிய மேதை தோப்பில் முகம்மது மீரான் எழுதிய "அன்பிற்கு முதுமையில்லை' என்கிற சிறுகதையையும் எழுத்தாளர் பிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதிய "ரணம்' என்கிற சிறுகதையும் அற்புதமாக இணையும் புள்ளியைக் கண்டேன். அதுதான் இந்த சினிமா'' என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT